மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட துறைநீலாவணை வட்டாரத்தில் ஆங்கில மொழி மூலமான ஆரம்ப பாடசாலை தவிசாhளர் மே.வினோராஜ் தலைமையில் நேற்று திறந்துவைக்கப்பட்டது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட துறைநீலாவணை வட்டாரத்தில் ஆங்கில மொழி மூலமான ஆரம்ப பாடசாலை தவிசாhளர் மே.வினோராஜ் தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டபோது கலந்து கொண்டு உரையாற்றிய பிரதேச செயலாளர் அவர்கள் பிரதேசத்தில் ஆங்கில மொழிமூல பாடசாலை ஆரம்பித்து வைப்பதில் நான் பெருமையடைகின்றேன் எனவும் இப்பாடசாலையூடாக மாணவர்கள் மும்மொழி கல்வியை கற்பதற்கு பெரும் வாய்ப்பாக அமைகின்றது இது அவர்களின் ஆங்கில அறிவை ஆரம்பத்தில் தூண்டுவதாக அமையும் மேலும் ஆங்கில கல்வி மிக முக்கியமானது என்பதனால் அதிக பெற்றார்கள் இப்பாடசாலையில் மாணவர்களளை இணைத்துக்கொண்டுள்ளது சிறப்பாகும் ஆங்கிலக் கல்வியும் தொழில் நுட்பக் கல்வியும் இருகண்களாகும் அதற்காக இப்பணிக்கு தவிசாளருக்கு பாராட்டையும் தெரிவித்தார் மேலும் சிறு தரையை சமப்படுத்துவதற்கு சிறிய ரக உபகரணங்கள் போதும் ஆனால் தவிசாளர் அதனை சமப்படுத்த புல்டோசரை போல் வேகமாக செயற்படுகின்றார் அதனால்தான் அவரை நான் புல்டோசர் என்கின்றேன் காரணம் அவர் அனைத்து காரியங்களை அனைவரையும் சமனாக கருதி தனது கடமைனளை செய்கின்றார். மேலும் நாம் அனைவரும் ஒன்றினைந்து கடமையாற்றும் போது மக்களின் அபிவிருத்தி விருத்தியமையும் எனவும் கருத்துரைத்தார்.






