ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை கோமரங்கடவெல மகா வித்தியாலயத்தின் மாகாண கல்வி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.20 மில்லியன் செலவில் கணித ஆய்வகம் மற்றும் வகுப்பறைகள் கொண்ட புதிய இரண்டு மாடி கட்டிடம் மற்றும் ரூ.20 மில்லியன் பெறுமதியான இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம் இன்று (06) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோர்களின் தலைமையில் மாணவர்களிடம் திறந்து வைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
கணித ஆய்வகம் மற்றும் வகுப்பறைகள் கொண்ட இந்த இரண்டு மாடி கட்டிடத்திற்கு 2025 ஆம் ஆண்டு மாகாண ஒதுக்கீட்டில் ரூ.20 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும், புதிய இரண்டு மாடி வகுப்பறை கட்டிடத்தின் கட்டுமானம் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட போதிலும், அது இடை நடுவில் நிறுத்தப்பட்டது, அதற்காக ரூ.20 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது, அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , மாகாண கல்வி பணிப்பாளர், கோமரங்கடவல பிரதேச சபைத் தலைவர், திருகோணமலை வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் உட்பட பலரும் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.


