ஆரையம்பதி பிரதேசத்தில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டத்தின் இரண்டாம்கட்ட நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மார்ச் 01 முதல் “முழு நாடும் ஒன்றாக – தேசிய செயல் திட்டம்” உடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வார்த்தை முன்னிட்டு மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேசத்தில் இத் திட்டத்தின் முதலாம் கட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (03) , மற்றும் இரண்டாம் நேற்று புதன்கிழமை (04) ஆகிய இரண்டு நாட்களும்
பிரதேச செயலாளர் திருமதி தெட்ஷணகெளரி தினேஷ் தலைமையில் நடைபெற்றது .

பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்ற நிகழ்வில், விற்கின்ற – அடிமையான அனைவருக்குமான அறிவித்தல் – “அகன்று செல்” என்ற வாசகத்தை மையமாகக் கொண்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதுடன் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் கிருஷ்ணபிள்ளை இளம்குமுதன், நிர்வாக உத்தியோகத்தர் வேலாயுதம் தவேந்திரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.