இலங்கை பிரதம நீதியரசர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு விஜயம்

சண்முகம் தவசீலன்
2026.03.04

இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன 2026.03.02 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு விஜயம் செய்து நீதிமன்ற செயற்பாடுகள், கட்டட நிலவரங்கள், ஏலத்தில் விற்பனைசெய்த பொருட்கள் மற்றும் வாகனங்கள் என பல்வேறு விடயங்கள் தொடர்பில் பார்வையிட்டு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்

பிரதம நீதியரசர் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு முதல் தடவையாக வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த கலந்துரையாடலில் வவுனியா மற்றும் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதிகள், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட மேலதிக நீதிபதி, சட்டத்தரனிகள், பொலிஸார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற அலுவலக பதவிநிலை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.