வாழைச்சேனையில் பசுமை பெறுகை விழிப்புணர்வு நிகழ்வு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

சுற்றாடல் அமைச்சின் காலநிலை மாற்றம் (Climate change) ஒழுங்குபடுத்தலின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச திணைக்களங்கள் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், மாநகர சபை நகரசபை,பிரதேச சபை அனைத்து திணைக்களங்களின் விடயம் சார் (Procurement) உத்தியோகத்தர்களுக்கான பசுமை பெறுகை விழிப்புணர்வு (Green procurement awareness) தொடர்பான ஒரு நாள் செயலமர்வு கல்லடி Green Garden Hotel ல் நேற்று முன் தினம் (18) நடைபெற்றது.

அதில் மாவட்ட செயலக, பிரதேச செயலக, பிரதேச சபை, நகர சபை, மாநகர சபையின் அரச உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களின் இணைக்கப்பட்டுள்ள சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைப்பும் குறிப்பிடத்தக்கதாகும்.