எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகம், ஆரையம்பதி ஸ்ரீ சிவனேஸ்வரர் ஆலயம், பிரதேச அறநெறிப் பாடசாலைகள் ஆகியன இணைந்து நடாத்திய மகா சிவராத்திரி நிகழ்வு , பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் நேற்று முன்தினம் (15) ஆலய பூசையுடன் சிவனேஸ்வரர் ஆலயத்தில் ஆரம்பமாகியது.
இதில் நந்திக்கொடி ஏற்றல், மங்கல விளக்கேற்றல், அறநெறிக் கீதம் இசைத்தல், இறைவணக்கம், வரவேற்புரை என்பவற்றுடன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளின் ஆற்றுகைகளும், ஆரையூர் கலாமன்ற கலைஞர்களின் பக்திப் பாடல்களும் அரங்கேற்றப்பட்டன.
[10:51, 17/02/2026] Uthayakanth M 2: கொட்டும் மழையிலும் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு உற்சாகத்துடன் தோற்றிய மாணவர்கள்!!
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை இன்று (17) முதல் ஆரம்பமாக இடம் பெற்றுவரும் நிலையில் இன்று காலை மாணவர்களை தமது பெற்றோர்கள் உற்சாகத்துடன், அழைத்து வந்தமையினை காண முடிந்தது.
இன்றைய தினம் மழையுன் கூடிய கால நிலை காணப்பட்ட போதிலும், பாடசாலை பரீட்சார்த்திகளும், தனியார் பரீட்சாத்திகளும் மழையினை பொருட்படுத்தாமல் உற்சாகத்துடன் வருகை தந்தமையினை காண முடிந்தது.
அதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 கல்வி வலையங்களிலும் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டு இன்றைய தினம் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


