நூருல் ஹுதா உமர்
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் 125ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பெண்கள் பகுதிக்கான புதிய நுழைவாயில் திறப்பு விழா பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு 2000 ஆம் ஆண்டு சாதாரண தரம் எழுதிய இப்பாடசாலை மாணவர் குழுவும், 2003 ஆம் ஆண்டு உயர்தரம் எழுதிய மாணவர் குழுவும் பூரண அனுசரணை வழங்கியிருந்தனர். அவர்களின் ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதியாக கல்முனை கோட்டக்கல்வி அலுவலகத்தின் கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ்.சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் 2003ஆம் ஆண்டு மாணவர் குழுவினரும், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்காக ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.


