(சர்ஜுன் லாபீர்)
சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று(10) ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் ஒருங்கிணப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ,பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம் தாஹீர், எம்.எஸ் உதுமாலெப்பை,கே.கோடிஸ்வரன்,
சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர்,பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள் பிரதேச செயலகத்தின்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இவ் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பிரஜா சக்தி கிராம மட்ட செயற்திட்டங்களுக்கான அங்கிகாரம், அங்காடி வியாபரிகளுக்கான வியாபரத்திற்கான அனுமதி அத்தோடு சம்மாந்துறை பிரதேச நீர்பாசன பிரச்சினைகள்,புனரமைப்பு செய்யப்படாமல் இருக்கும் வீதி பிரச்சினைகள்,வீதி ,சம்மாந்துறை வைத்தியசாலை காணி விவகாரம்,செந்நெல் கிராம,மல்வத்தை பிரதேச வைத்தியசாலையகளின் பிரச்சினைகள், சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள உள்ளக பிரச்சினைகள் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப படத்தினை ஆரம்பித்து வைப்பது சம்மந்தமான தீர்மானம்,மாட்டு வண்டி தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு,வீரமுனை இந்துமயான பிரச்சினைக்கான தீர்வு,சம்மாந்துறை கல்வி வலய பாடசாலைகளின் பெளதீக மற்றும் உள்ளக சார்ந்த பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்,விவசாய காணி சம்மந்தமான பிரச்சினைகள்,நீர்ப்பாசன பிரச்சினைகளுக்கான முறைப்பாடுகளும்.தீர்வுகளும், கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டன என்பதோடு இன்னும் பல முடிவுகளும் எடுக்கப்பட்டன குறிப்பிடத்தக்க விடயமாகும்.


