ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலையில் பாரம்பரிய தைப்பொங்கல் விழா இன்று (08.02.2026) திருகோணமலையில் இடம் பெற்றது.
திருகோணமலை அகரம் மக்கள் கலைக் கூடம் ஏற்பாடு செய்த குறித்த பாரம்பரிய தைப்பொங்கல் நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். பாரம்பரிய முறைகளை எடுத்துக்காட்டும் தைப்பொங்கல் நிகழ்வின் கலை கலாசார நிகழ்வுகளும் இதன் போது இடம் பெற்றன. தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்த ஏற்பாட்டு குழுவினர்கள் இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கதுடன் பாரம்பரிய தைப் பொங்கல் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினரால் சிறப்புரையும் இடம் பெற்றன.
இதில் குறித்த அமைப்பின் உறுப்பினர்கள்,அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


