கிழக்கு மாகாண வீதி,போக்குவரத்து அபிவிருத்தி தொடர்பில் ஆளுனர் தலைமையில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த திணைக்களங்களின் 2026 ஆம் ஆண்டுக்கான மூலதனத் திட்டங்களின் வருடாந்த கொள்முதல் திட்டம் குறித்து தொடர்பிலான மறுபரிசீலனை செய்யும் கலந்துரையாகல் இன்று (06) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் திருகோணமலை பிரதம செயலாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் போது குறித்த அமைச்சும் அதனுடன் இணைந்த நிறுவனங்களான மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம், மாகாண போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, மாகாண கட்டிடத் திணைக்களம் மற்றும் மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் கொள்முதல் திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, மோட்டார் வாகன மற்றும் போக்குவரத்து, கட்டிடங்கள் மற்றும் நிர்மாணம், வீடமைப்பு, கிராமிய நவீனமயமாக்கல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் பீ. தயானந்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.