எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04) திகதி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மிகவும் கோலாகலமாக சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் இடம் பெற்றது.
அதனை முன்னிட்டு “மூவின மக்களின் ஒன்றிணைந்த சுதந்திர தின கொண்டாட்டம் – அழகான தேசம், அன்பான மக்கள்” எனும் தொனிப்பொருளில் மாபெரும் சுதந்திர தின நிகழ்வு மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் மூவின மக்ககளின் பங்களிப்புடன் மிகச்சிறப்பாக இடம் பெற்றதுடன் இதனை முன்னிட்டு மட்டக்களப்பு வெள்ளை பாலம் பிரதான வீதி ஊடாகவும் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதி ஊடகவும் வாகன பேரணிகள் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் பண்ட் வாத்தியங்கள் முழங்க காந்தி பூங்காவை வந்தடைந்ததும் பிரதான அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன் போது முதல் நிகழ்வாக பிரிகேடியர் ஸ்ரீ ராஜபக்ஷவினால் தேசியகொடி ஏற்றப்பட்டு இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு பிரஜைகள் சபை மற்றும் கல்வி அபிவிருத்திச் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட பிரிகேடியர் ஸ்ரீ ராஜபக்ஷ கலந்து கொண்ட நிகழ்வில் மூவின மத தலைவர்கள் உள்ளிட்ட மூவின மக்களும் கலந்துகொண்டு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது.


