திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற சுதந்திரதின கொண்டாட்டம்!

ஹஸ்பர் ஏ.எச்_

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று (04.02.2026) பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்றது.

கொட்டும் மழையிலும் 78 ஆவது தேசிய சுதந்திர
தேசியக்கொடி பிரதேச செயலாளரால் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்த முப்படை வீரர்களை நினைவு கூறும் வகையில் இரண்டு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

“இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” (Let us build Sri Lanka) எனும் தொனிப்பொருளின் கீழ் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து முள்ளிப்பொத்தானை தி/கிண்/ஹிஜ்ரா கனிஷ்ட பாடசாலையிலும் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு இடம் பெற்றது இதில் பிரதம அதிதியாக தம்பலகாமம் பிரதேச செயலாளரும் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபருமான (காணி) ஜெ.ஸ்ரீபதி கலந்து சிறப்பித்தார். இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள் ,பெற்றார்கள்என பலரும் கலந்து கொண்டதுடன் மாணவர்களின் சுதந்திர தின கலை கலாசார நிகழ்வுகளுடன் மர நடுகையும் இடம் பெற்றது.