கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

சண்முகம் தவசீலன்
2026.02.01

கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான வீழிப்புணர்வு கருத்தரங்கு முல்லைத்தீவில்.

கிவுல் ஓயா நீர்த்தேக்க மேப்பாட்டுத்திட்டம் தொடர்பான விழிப்புனர்வு கருத்தரங்கானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் நேற்று (01) கரைதுறைபற்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கருத்தரங்கில் கிழக்கு மாகாண ஓய்வுபெற்ற முன்னாள் காணி ஆணையாளர் கதிராமத்தம்பி குருநாதன் வளவாளராக கலந்துகொண்டதுடன், இதில் வவுனியா வடக்கு பிரதேச சபை உப தவிசாளர், வவுனியா வடக்கு, கரைதுறைபற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் கிவுல் ஓயா திட்டத்தில் பாதிக்கப்படும் மக்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.