கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொது கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக சபைத் தெரிவும், இன்று ஞாயிற்றுக்கிழமை (01.02.2026) மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள அமைப்பின் காரியாலயத்தில் ஊடகவியலாளர் எல்.தேவஅதிரன். தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கிழக்கு மாகாண ஊடக ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களை பகிர்ந்திருந்தனர்.

இதன்போது கடந்த காலத்தில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தால், மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் செயறிட்டங்கள், தொடர்ந்து எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் இதன்போது கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபை தேர்வு இடம்பெற்றது. ஒன்றியத்தின் புதிய தலைவராக வ.சக்திவேல் அவர்களும், செயலாளராக வ.துசாந்தன் அவர்களும், பொருளாளராக ச.சதீஷ்குமார் அவர்களும், உப தலைவர்களாக ரி.எல்.ஜெளபர்கான், மற்றும் எல்.தேவஅதிரன், அவர்களும் உபசெயலாளராக எஸ்.சஜீத் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து இணைப்பாளராக ஏ.எச்.ஏ.ஹுசைன் அவர்களும், நிர்வாக சபை உறுப்பினர்களாக சு.கமலேஸ்வரன், சு.துசியந்தன், எல்.தேவப்பிரதீபன், பே.சபேஸ், ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து சங்கத்தின் பெயரில் அச்சிடப்பட்ட ரீசேட் ஊடகவியலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதோடு, சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் பல ஆக்கபூர்வமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு, தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் பொதுச் சபை கூட்டம் நிறைவு பெற்றது.