விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டமும் துணுக்காய் பிரதேச செயலகமும் இளம்புயல் விழையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா 29.01.2026 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தென்னியன்குளம் பொது விழையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளரும் ஊடகவியலாளருமாகிய ச.தவசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் துணுக்காய் பிரதேச செயலாளர் இராமதாஸ்.ரமேஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
பொங்கல் நிகழ்வுடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் சிறுவர்கள், இளையவர்கள் மற்றும் முதியவர்களுக்கான கிறிஸ் மரம் ஏறுதல், கிளித்தட்டு , கயிறிழுத்தல், தலையணை சண்டை , பலூன் ஊதி உடைத்தல் , முட்டி உடைத்தல், தேங்காய் திருவுதல், கிடுகு பின்னுதல் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்வுகள் பல நடைபெற்று பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன
இதனை விட தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் தெரிவுசெய்யப்பட்ட 42 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது
இந் நிகழ்வில் தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் செ.நவரத்தினராசா, தென்னியன்குளம் கிராம அலுவலர் செல்வி ந.கஜனி, கிராம அபிவருத்திச் சங்கத் தலைவர், மாதர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர், கமக்கார அமைப்பு தலைவர், நன்னீர் மீன்பிடிச் சங்க தலைவர், விழையாட்டுக் கழக தலைவர் துணுக்காய் பிரதேச செயலக அதிகாரிகள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பெருந்திரளாளோர் கலந்துகொண்டனர்


