நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய நிந்தவூர் கமு/கமு/ இமாம் றூமி வித்தியாலயத்தின் 2026ஆம் கல்வி ஆண்டிற்கான வித்தியாரம்ப விழா நேற்று (29) பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் ஏ.பி. செறோன் தில்ரஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். இதன்போது, முதலாம் தரத்திற்கு புதிதாக இணைந்த மாணவர்களுக்கு தமிழ் அரிச்சுவடியின் முதலெழுத்தை எழுதப் பழக்கி வைத்து, வித்தியாரம்ப விழாவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.எம். அன்சார், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஜே.எம். ஜுசைல், அல்-பர்ஹான் சனசமூக நிலையத்தின் தலைவர் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.எம். றபீக், அந்நிலையத்தின் செயலாளர் கே.பி. பிர்தெளஸ், பிரதி தலைவர் எம்.ஐ.எம். றபீக், ஸம்ஸ் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் ஏ.ஜே. ஜனூபர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்வை வெற்றிகரமாக்கினர்.


