எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தாழங்குடா சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி வளாகத்தில் அமைந்துள்ள சுவபோஜன் விற்பனை நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு அண்மையில் (26) மண்முனைப்பற்று உதவி பிரதேச செயலாளர் கி. இளம்குமுதன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புகுழு தலைவருமான கந்தசாமி பிரபு, மண்முனைப்பற்று பிரதேச சபை தவிசாளர் பா. செந்தில்குமார், மாவட்ட சமுத்தி பணிப்பாளர் எஸ். ராஜ்பாபு, மாவட்ட சமூர்த்தி தலைமையக சிரேஷ்ட முகாமையாளர் எம். பஸீர் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலக கணக்காளர் ஏ. மோகனகுமார், நிருவாக உத்தியோகத்தர் திரு. தவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி சந்தைப்படுத்தல்- 2025 ஆம் ஆண்டு வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி நலனுதவி பெற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வறுமை நிலையில் இருந்து விடுவிக்கும் நோக்குடன் சமுர்த்தி ‘சுவபோஜன்’ திட்டத்திற்காக 10 பெண் தொழில் முயற்சியாளர்கள் பங்குபற்றும் விற்பனை நிலையத்தை அமைப்பதற்காக சமுர்த்தி திணைக்களத்தினால் கிடைக்கப் பெற்ற ரூ 1,000,000 நிதியினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


