தெற்கு கடற்பரப்பில் சுற்றிவளைப்பு பலர் கைது!

நாட்டின் தெற்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகளில் இருந்து 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பெருமளவு போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.