எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
“வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைக்கமைவாக முன்னெடுக்கப்படும் முக்கிய திட்டங்களில் ஒன்றான “பிரஜா சக்தி” வறுமையொழிப்பு தேசிய இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு ஏற்ப கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுக்குற்பட்ட கிராம சேவகர் பிரிவுகளுக்காக தெரிவு செய்யப்பட்ட பிரஜா சக்தி உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று (22.01.2026) பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கடந்த மாதம் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட பிரதேச செயலங்களுக்கான ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான கந்தசாமி பிரபுவினால் பிரஜா சக்தி தவிசாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக், மூலோபாய பிரதிநிதித்துவ குழுவின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி, குழுவின் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதன்போது, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ஏ. ஜுமானா ஹஸீன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ. எம். ஷாஹித், கோறளைப்பற்று மத்திக்கான “க்ளீன் சிறீலங்கா” அமைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ஏ. எல். சமீம், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம். எல். ஏ. மஜீத், பிரஜா சக்தியின் தவிசாளர்கள், செயலாளர்கள், குழுவில் இணைக்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களுடன் நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளும் உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர்.


