எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் ‘டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் முகமாக இக் கலந்துரையாடல் பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று (21) இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம். பி. எம் முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கோறளைப்பற்று மத்தியின் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம். நஜீப் கான், பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ஏ.ஜுமானா ஹஸீன், பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நெளபர், பொதுச் சுகாதார பரிசோதகர்களான யு.எல்.எம்.ஜின்னா, எம்.சகீல், மற்றும் விளையாட்டு கழக, பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி கள உத்தியோகத்தர்கள், செயலகத்தின் கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .
இதன் போது ஒவ்வொரு செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய தினங்களில் பிரதேச பள்ளிவாயல்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், விளையாட்டு கழகங்கள், இளைஞர் கழகங்கள் உதவியுடன் சிரமதானங்கள், மற்றும் ‘டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான கள விஜயம்” மேற்கொள்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.


