எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் “விவசாய மறுமலர்ச்சியின் விடியல்” தொடர்பான கலந்துரையாடல்
மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.ஏப்.ஏ. சனீர் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (21) இடம் பெற்றது.
விவசாய அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறை படுத்தப்படவுள்ள “விவசாய மறுமலர்ச்சியின் விடியல்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் 2025 ஆண்டுக்கான விவசாய முன்னேற்ற மீளாய்வு தொடர்பாகவும் 2026 ஆண்டுக்கான விவசாய அபிவிருத்தி தொடர்பான திட்டமிடல் என்பன கவணம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தத்தாகும்.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளின் கீழ் கடமையாற்றும் விவசாய அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் மாவட்டத்தில் நிலையான விவசாய அபிவிருத்தியடைவதற்கான 50 வீதம் மானிய அடிப்படையிலான செயற்திட்டங்கள் மற்றும் விவசாயிகளுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழக்குதல் திட்டம் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் மாவட்டத்தின் உணவு பாதுகாப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த வருடம் இளம் விவசாயதொழில் முனைவோருக்கு குறைந்த வட்டி வீதத்தில் விவசாய அமைச்சினால் கடன்கள் வழங்கப்பட்டதுடன் உப உணவு பயிர் செய்கைதிட்டத்தின் கீழ் பயறு, நிலக்கடலை, கெளப்பி செய்கைக்காக முழு மானிய அடிப்படையில் 14 பிரதேச செயலக பிரிவுகளுக்கும் வழங்கப்பட்டன.


