காத்தான்குடியில் சமூக வலுவூட்டல் தேசிய வேலைத்திட்ட வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

காத்தான்குடி பிரதேச செயலக சமூர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட வறிய மற்றும் மிக வறிய குடும்பங்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (16) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜுத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு தொழில் உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்

சமுர்த்தி தினைக்களத்தின் சமூக வலுவூட்டல் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக 24 குடும்பங்களுக்கு ஆடை உற்பத்திக்காகவும், உணவு உற்பத்தி தயாரிப்புக்குமான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.தனூஜா, கணக்காளர் ஏ.ஆர் அகமட் முப்லி , மீன்பிடி அமைச்சின் இணைப்பாளர் எம்.நசீர்,சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ், முகாமைத்துவ பணிப்பாளர் ஆர்.வாமதேவன், கருத்திட்ட முகாமையாளர் திருமதி கண்ணன்.சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் ஏம்.எம்.சுல்மி, எஸ்.எச்.எம்.முஸம்மில் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.