ஹஸ்பர் ஏ.எச்_
பெண் தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கான சிறந்த விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு ஹில்டனில் இடம் பெற்றது.
இதனை மகளிர் தொழில் முயற்சியாண்மை மற்றும் வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் நடுத்தரளவு தொழில் உற்பத்தியில் ஈடுபட்டமைக்கு தேசிய மட்டத்தில் இரண்டாம் இடமாக வெள்ளிப்பதக்கத்தையும்,மாகாண மட்ட விருதையும் திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவை சேர்ந்த முள்ளிப்பொத்தானை எம்.ஆர்.எம்.பிஸ்ரியா பெற்றுக் கொண்டார்.
ஐந்தாண்டு கால வருட சராசரி வருமானம் அடிப்படையில் சிறந்து விளங்கும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்காக திறம்பட வருமானமீட்டி தமது தொழில் விருத்திகளை பெற்றமைக்காக குறித்த விருதுகள் வழங்கலில் தெரிவுகள் இடம் பெற்றது.
குறித்த பிஸ்ரியா எனும் பெண் பை (Bag) உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்.
தேசிய மட்டத்தில் இரண்டாமிடம் பெற்றமைக்காக ரூபா 100000.00 பெறுமதியான காசோலையும் கேடயமும்,மாகாண மட்ட விருதுக்கு ரூபா 75000.00 காசோலையும் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலை பைகள்,பெண்களுக்கான பை உற்பத்தியில் சிறந்து விளங்கி வருகிறார் இதற்காகவே இவ் விருது கிடைக்கப்பெற்றது.
இதனை கௌரவிக்கும் முகமாகவும் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி ஸ்ரீபதி (15) பிரதேச செயலகத்தில் வைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.இக் குறித்த பாராட்டு விழா நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்,நிருவாக உத்தியோகத்தர்,கணக்காளர் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இக் குறித்த பெண் சுயதொழில் முயற்சி ஊக்கிவிப்பு தொடர்பில் சிறந்த பயிற்சி வழங்குனராகவும்,போதனாசியராகவும் பணியாற்றி வருகின்றார்.
இதற்கு முன்பும் பல பெண் சுயதொழில் முயற்சியாண்மையாளருக்கான விருதுகளை தனதாக்கிக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


