அகில இலங்கை சுவ சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாபெரும் இரத்த தான முகாம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

அகில இலங்கை சுவ சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாபெரும் இரத்த தான முகாமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் காணப்படும் இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக அகில இலங்கை சுவ சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதான ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று (13) திகதி மாபெரும் இரத்த தான நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மருத்துவமனைகள் தொண்டு நண்பர்கள் அமைப்பு – லண்டன் (Friends of Batticaloa Hospitals Charity- London), ஆரையம்பதி எக்ஸலன்ஸ் லயன்ஸ் கழகம் (Lions club of Arayampathi Excellence), இரீடோ தொழிற்பயிற்சி நிலையம் (EREEDO Vocational Training Campus) மற்றும் ஸ்மார்ட் டெக் நிறுவனம் (Smart Tech Organization) ஆகிய அமைப்புக்கள் இப்பாரிய மனிதாபிமானப் பணியினை முன்னெடுக்க இணை அனுசரணை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது .

போதனா வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர் சஞ்சிதா தலைமையில் தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் குருதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

சுவ சேவா சங்க அங்கத்தவர்கள் வைத்தியசாலை ஊழியர்கள், முப்படையினர், பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் உற்சாகத்துடன் இரத்த கொடையி என வழங்கியிருந்தனர்.

இந் நிகழ்வில் 50 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியதுடன், இரத்த கொடை வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.