சம்மாந்துறை பிரதேச செயலக கலை, இலக்கிய விழா!

(சர்ஜுன் லாபீர்)

கலாச்சார அலுவல்கள் திணைக்களம்,சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் கலாச்சார அதிகார சபையும் இணைந்து நடாத்திய பிரதேச செயலக கலை இலக்கிய விழா இன்று(13)செவ்வாய்க்கிழமை கலாச்சார உத்தியோகத்தர் ரஸ்மி எம்.மூஸாவின் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் மர்ஹும் கலாபூஷனம்,கலைவேள் மாறன் யூ.ஸெயின் அரங்கில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், அரசியலமைப்புப் பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக அபேவிக்ரம கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந் நிகழ்வில் விசேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான எஸ்.ஜெகராஜன், ஏ.எல் இப்திகார் பானு,சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல் மாஹிர்,சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டி.பிரபா சங்கர்,உதவி பிரதேச செயலாளர் வி.வாசீத் அஹமட், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ,ஏ
எம்.பிரதீப் குமார ஆகியோர்கள் கலந்து கொண்டதோடு

மேலும் இந் நிகழ்வில் இலக்கிய அதிதியாக தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் மற்றும் அதிதிகளாக சம்மாந்துறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் டி.எம் ரிம்சான்,கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.டி.எம்.ஜனூபர், நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம்.ஜெமீல்,சமூர்த்தி தலைமைப்பிட முகாமையாளர் எம்.பி.எம் ஹுசைன், பிரதேச செயலக கிளைகளின் பிரதம முகாமைத்துவ உதவியாளர்கள்,துறைசார் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கலாச்சார அதிகார சபையின் உப தலைவர் எம்.எல் இஷ்சாக்,உட்பட பிரதேசத்தின் மூத்தகலைஞர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கலை,கலாச்சார மற்றும் இலக்கிய துறைகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் கலைஞர்களுக்கும் பரிசில்களும், கெளரவிப்புக்களும் இடம்பெற்ற்துடன்,சுபதம் கலைஞர் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவ் விழாவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஆகியோர்களின் சேவைகளை பாராட்டி பொன்னாடை மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்படமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.