அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில், சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தின் கல்வி, இணைச் செயற்பாடுகளில் சிறப்பான சாதனைகளைப் புரிந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் “லீடர் க்ரைஸ்டல் ஹீரோஸ் நிகழ்வு அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.நூருல் ஹுதா உமர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாடசாலையின் சாதனை மாணவர்கள் பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள், பணப்பரிசு என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மட்டுமல்லாது, சமூக பொறுப்புணர்வு, தலைமைத்துவ திறன் மற்றும் ஒழுக்க வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளரான இலங்கை கல்வி நிர்வாக சேவை முதற்தர அதிகாரி எம்.எஸ். சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாகவும், அமைப்பின் ஆளுநர் சபை தலைவரும், சிம்ஸ் கெம்பஸ் தவிசாளருமான கலாநிதி அன்வர் எம். முஸ்தபா, பிரதிக்கல்வி பணிப்பாளர்களான எம்.எச். றியாசா, என். வரணியா, எம்.எல்.எம். முதரிஸ், ஆளுநர் சபை உறுப்பினர் ஏ.பி.எப். நஸ்மியா, எஸ். சுரேஷ், அஸ்மா அப்துல் மலிக் ஆகியோர் கௌரவ அதிதியாகவும், ஆசிரிய ஆலோசகர்களான எஸ்.எம்.எம். அன்சார், எம்.எம்.எம். றபீக் ஆகியோர் விசேட அதிதிகளாகவும், கல்வி அதிகாரிகள், பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா பிரதிநிதிகள் கலந்து கொண்டு, மாணவர்களின் சாதனைகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.
எதிர்காலத் தலைமுறையை திறமையான, ஒழுக்கமுள்ள சமூகத் தலைவர்களாக உருவாக்கும் நோக்குடன், இத்தகைய ஊக்குவிப்பு நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது மல்ஹர்ஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய அதிபர் எம்.சி. நஸ்லின் ரிப்கா அன்சார், சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை அதிபர் எம்.ஐ. இல்லியாஸ், சாய்ந்தமருது அல் கமரூன் வித்தியாலய அதிபர் நுஸ்ரத் பேகம், சாய்ந்தமருது ரியாளுள் ஜன்னா வித்தியாலய அதிபர் ஏ. அஸ்தர், கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலய அதிபர் ஆளுநர் சபை உறுப்பினர் ஏ.எச். அலி அக்பர், நாவிதன்வெளி அல் ஹிரா வித்தியாலய அதிபர் ஆளுநர் சபை உறுப்பினர் ஏ.எல். சனூஸ் போன்ற அதிபர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


