இன்றைய தினம் 09.01..2025 பாராளுமன்ற கேள்வி பதிலின் போது.
முக்கியமாக பிரதேச சபைகளுக்கு சொந்தமான பாதைகள் RDD அதாவது மாகாண சபைக்குச் சொந்தமான பாதைகளுடைய அபிவிருத்தி சம்பந்தமாக தொடர்ச்சியாக எங்களுடைய மாவட்டங்களிலே பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றது. கௌரவ அமைச்சர் அவர்கள் இந்த நிதியை ஒதுக்கியிருக்கிறதாகவும், அவர் இந்த நிதியை RDD ஊடாக அல்லது போக்குவரத்த்து அமைச்சு அல்லது நெடும்சாலைகள் அமைச்சு ஊடாகத்தான் இந்தப் பாலங்கள் செய்யப்படப் போவதாக அவருடைய அந்த நாற்பது மில்லியன் நிதியினை அவங்களுடன் இணைந்துதான் செய்வதாகச் சொல்லியிருக்கிறார்.
கௌரவ சபாநாயகர் அவர்களே! என்னுடைய கேள்வி மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் எங்களுடைய படுவாங்கரை பிரதேசத்தையும் எழுவான்கரை பிரதேசத்தை இணைக்க வேண்டிய வகையிலே பல பாலங்கள் இருக்கின்றது. நாங்கள் ஜனாதிபதியை சந்தித்த பொழுது, 2024 டிசம்பர் மாதத்திலே நாங்கள் இந்தப் பாலங்களைப் புனரமைப்பதைப்பற்றி நாங்கள் பல தடவைகள் பேசியிருக்கிறோம். கௌரவ அமைச்சர் பிமல் ரட்நாயக்க அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகை தந்த பொழுதும் நாங்கள் சில சில பாலங்களை அமைப்பது பற்றி நாங்கள் நேரடியாகவே வேண்டுகோள் முன் வைத்திருக்கிறோம். எங்களுடைய கௌரவ பிரதேச அபிவிருத்தி தலைவர் இந்தச் சபையில் இருக்கின்றார்.
அந்த வகையிலே கௌரவ சபாநாயகர் அவர்களே! பட்டிருப்பு பாலம் அதாவது பட்டிருப்பு பாலத்தினுடைய அபிவிருத்தி சம்பந்தமாக நாங்கள் கோரிக்கை முன்வைத்திருக்கிறோம். இதுவரைக்கும் அவ் வேலை நடந்ததாகத் தெரியவில்லை. அதே நேரத்தில் மண்டூர் குமண்வெளி பாலம் அது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாக எங்களுக்குத் தெரியவில்லை. அம்பலாந்துறை குருக்கள்மட பாலம் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கை எடுத்ததாகவும் எங்களுக்குத் தெரியவில்லை. நரிப்புல் தோட்டத்துக்குப் போறதுக்கான பாலம் சம்பந்தமாக எந்த நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை. மகிழவெட்டுவான் பாலம் கடந்த வெள்ளத்தில் செல்லப்பட்டது.
அவ்பாலம் இதுவரைக்கும் புனரமைக்கப்பட்டதாக தெரியவில்லை. இதைத் தாண்டி கிரான் பாலம். கேள்விஎன்னவெனில் படுவாங்கரை மற்றும் எழுவான்கரையை இணைத்து எங்களுடைய மக்களுடைய தேவையை நேரத்தை வீணடிக்காத முறையில் செய்வதற்கு உங்களோடய மாகாண சபை அமைச்சின் ஊடாக இந்த அதிகாரங்களை வைத்து செய்வதாக பதிலிலே குறிப்பிட்டு இருந்தீர்கள்.
நீங்கள் போக்குவரத்து மற்றும் நெடும்சாலைகள் அமைச்சர் .இந்த பாலங்களைச் செய்வதற்கு நீங்கள் RDD உடன் இணைந்து எதாவது ஒரு வேலைத்திட்டத்தை வைத்திருக்கிறீர்களா? இல்லாதுவிடின் எப்படி இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்போகிறீர்கள்? RDD மூலம் பாலங்கள் நீங்கள் எப்படி செய்யப்போகிறீர்கள் என்பது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்யன் அவர்கள் கேள்வி எழுப்பினார்


