வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

இலங்கை கடற்படை, மற்றும் காவல்துறையினர் இணைந்து நேற்று (08) கொழும்பு அளுத்கடை பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் 1,560 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல, வலான காவல்துறையின் மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34 மற்றும் 48 வயதுடைய கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேக நபர்களும் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.