சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் கூடுதல் பிற்பகல் விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குநர் வசந்த குடலியனகே இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு ஒவ்வொரு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய பிற்பகல் சேவை இயக்கப்படவுள்ளது.
இதற்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஏர்பஸ் A350-900 விமானத்தை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.
எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் இந்த சேவைகள் ஆரம்பமாகவுள்ளன.


