வீடொன்றில் தீ விபத்து மூவர் பலி!

அனுராதபுரம், கலென்பிடுனுவெவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (06) ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

குடும்ப தகராறு காரணமாக நபரொருவர் தனது வீட்டிற்கு தீ வைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (6) அதிகாலை 2:00 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் தீ வைத்த நபரும் அவரது மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியார் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், கடுமையான தீக்காயங்களுக்குள்ளான அவரது மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஏனையவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கலென்பிடுனுவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.