ஜப்பானின் ஷிமானே மாகாணத்தில் அந்நாட்டு நேரப்படி காலை 10.18 அளவில் 6.2 மெக்னிடியூட் அளவிலான வலுவான நில நடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
முதல் நில நடுக்கத்தை தொடர்ந்து சில நிமிடங்களிலேயே சுகோகு, டோட்டோரி மாகாணத்தில் உள்ள சகாய்-மினாடோ, ஹினோ மற்றும் கோஃபு மாகாணங்களையும், ஷிமானே மாகாணத்தில் உள்ள மாட்சு மற்றும் யசுகி நகரங்களையும் பாதித்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து , காலை 10.30 ஆளவில் யசுகி பகுதியில் 5.1 மெக்னிடியூட் அளவில் மற்றொரு நில நடுக்கம் ஏற்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


