வெனிசுவேலா விவகாரம் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபை அவசர கூட்டம்!

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை வெனிசுலாவில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அவசரக் கூட்டத்தை இன்று(05) கூட்டுகிறது.

வெனிசுவேலா நாட்டின் நீண்டகால ஜனாதிபதியாக இருந்த நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்கப் படைகளால் சிறைக்கப்பிடிக்கப்பட்டமை தொடர்பிலேயே இந்த கூட்டம் கூடவுள்ளது.

கொலம்பியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று, 15 உறுப்பு நாடுகளின் தூதுவர்கள் முன்னிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், அமைதியை நிலைநாட்டத் தேவையான அவசர முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெனிசுவேலாவுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்குப் பின்னர் மூன்றாவது முறையாகப் பாதுகாப்பு சபை கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.