கல்முனை: அம்பாறை மாவட்டம், மருதமுனை பகுதியில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகித்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி 8-ஆம் திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணி: பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை புறநகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) மாலை, கல்முனை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பெரிய நீலாவணை பொலிஸார் இணைந்து விசேட தேடுதல் வேட்டை ஒன்றினை முன்னெடுத்தனர். இதன்போது, இரகசிய தகவலின் அடிப்படையில் சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்: கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 30 கிராம் ஹெரோயின் மற்றும் 10 கிராம் ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டன. இச் சந்தேக நபர் ஏற்கனவே சாய்ந்தமருது பொதுச்சந்தை பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற நடவடிக்கை: கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சனிக்கிழமை (ஜனவரி 3) கல்முனை நீதிமன்ற பதில் நீதவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, அவரை 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
மேலதிக விசாரணை: தற்போது தடுப்புக்காவலில் உள்ள சந்தேக நபரிடம் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் (D.C.D.B) மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கண்காணிப்பு தீவிரம்: அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த விசேட கண்காணிப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனையின் பேரில், பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கஜேந்திரன் வழிகாட்டுதலில் இப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்


