வாஸ் கூஞ்ஞ) 04.01.2026
மன்னார் மறைமாவட்டத்தில் முன்னோரால் அழைக்கப்பட்ட மூவியரசர் பட்டினம் என அழைக்கப்படும் பேசாலையில் மூவியரசர் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டதுடன் வருடம் ஒருமுறை சிம்மாசனத்திலிருந்து இறக்கப்படும் புதுமைமிக்க வெற்றி அன்னையின் திருச்சுரூபம் இநக்கப்பட்டு குழந்தை பேறு அல்லாத குடும்பங்களின் கையில் திருபாலனின் திருச்சுரூபம் கையில் ஏந்தவைத்து ஆசீர் வதிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
வருட பிறப்புக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமை திருஅவையானது மூவிரசர் பெருவிழாவை கொண்டாடி வருகின்றது. இத்தினத்தில் புதுமைமிக்கதும் மூவியரசர் பட்டினம் என அழைக்கப்படும் பேசாலை பகுதியின் பாதுகாவலியாம் பனித வெற்றி அன்னையின் திருச்சுரூபம் வருடத்தில் ஓரு முறை மூவியரசர் விழா அன்று சிம்மாசனதத்pலிருந்து இறக்கப்பட்டு விஷேட ஆசீர் பெறும் நிகழ்வாக இது அமைந்து வருகின்றது.
இப்பெருவிழா ஞாயிற்றுன் கிழமை (04.01) பேசாலை புனித வெற்றி அன்னை ஆலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலைமையில் கூட்டுத் திருப்பலியுடன் ஆரம்பமாகியது.
இவ்விழாவை பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய சமூகம் வெகு விமரிவையாக கொண்டாடி வருகின்றது. இவ்விழா ஞாயிற்றுக் கிழமை (04.01) இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இத்தினத்தில் பேசாலை வெற்றி அன்னையின் ஆலய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் பேசாலையின் பாதுகாவலியாம் புனித வெற்றி அன்னையின் திருச்சுரூபம் வருடத்தில் ஒருமுறை இறக்கப்படும் அன்னையை சிம்மாசனத்திலிருந்து இறக்கி விஷேடமாக அன்னையிடம் வேண்டுதல் கேட்கும் தினமாக பேசாலை மக்கள் சிறப்பாக கொண்டாடும் தினமாக இந்நாளை அனுஷ்டிக்கின்றனர்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அன்னையின் கையில் இருக்கும் பாலக இயேசுவை அருட்பணியாளர்களால் அவர்களின் கையில் கொடுக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்படும் சடங்கும் இந்நாளில் வழமையாக இடம்பெறுவதுபோல் இன்றையத் தினமும் (04.01) இச்சடங்கு இடம்பெற்றது.
இந்த அன்னையின் புதுமைகளை அறிந்து பல மாவட்டங்கள் கிராமங்களிலிருந்து பலர் இந்நாளில் இவ்விழாவில் கலந்து கொண்டு கடந்த காலத்தில் பெற்ற நன்மைகளுக்கு நன்றி செலுத்தும் முகமாகவும் தங்கள் தேவைகளுக்காக செபித்தும் சென்றனர்.
இவ் சடங்கைத் தொடர்ந்து அன்னையின் திருச்சுரூபம் பேசாலை கிராமத்துக்குள் பவனியாக எடுத்துச் செல்ப்பட்டு பின் கடற்கரை பகுதிக்கு ஊடாக கொண்டு வரப்பட்டு அன்னையின் பாதத்தை கடல் நீரால் கழுவி கடற்தொழில் சிறக்க இவ்நீரை கடல் நீருடன் கலக்கும் சடங்கும் அத்துடன் திருச்சுரூப ஆசீரும் இடம்பெறுவதுடன் கடந்த மார்கழி மாதம் (29.12) வெற்றி அன்னை பெருவழாவை முன்னிட்டு ஏற்றப்பட்ட கொடி மரம் இன்று இறக்கப்படுவதும்.வழமையாகும்


