( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் வருடாந்த திருவெம்பாவை நிகழ்வின் இறுதிநாளாகிய இன்று (3) சனிக்கிழமை நண்பகல் திருவாதிரை தீற்தோற்சவமானது காரைதீவு சமுத்திரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இன்று இறுதிநாளில் காரைதீவிலுள்ள ஆலயங்களின் 12 தேர்கள் வீதி ஊர்வலமாக வந்தன.
அதிகாலையில் திருவெம்பாவை தேர்கள் காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்தை அடைந்து திருவெம்பாவை பாடி பின்பு அங்கிருந்து தேரோடும் வீதி வழியாக பக்தர்கள் தேர்கள் சகிதம் கடற்கரையை சென்றடைந்ததும் அங்கு நண்பகல் 1 மணியளவில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
அங்கு சிவாச்சாரியார் சிவஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் கிரியைகளை ஒரு நடாத்தினார் .
பின்னர் சுவாமி சகிதம் பக்தர்கள் சமுத்திரத்தில் தீர்த்தமாடினர்.


