நூருல் ஹுதா உமர்
டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச ஊடகவியலாளருக்கு “நாம் இருக்கிறோம்” ஊடகவியலாளர் நிவாரணப் பணி எனும் திட்டத்தின் கீழ் வீட்டுப் பாவணைப் பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (20) சனிக்கிழமை மூதூர் தனியார் கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிவாரணப் பணியினை சிலோன் மீடியா போரம் மற்றும் லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க்ஸ் என்பன இணைந்து மேற்கொண்டது.
மூதூர் பிரதேச ஊடகவியலாளர் எம். இஹ்சான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் சட்ட முதுமானி பிர்னாஸ் இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச ஊடகவியலாளர்கள் 25 பேருக்கு பெருட்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீட், லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க்கின் தலைவர் மருதூர் ஏ.எல். அன்சார், சிலோன் மீடியா போரத்தின் செயலாளர் ஏ. எஸ்.எம். முஜாஹித், சிலோன் மீடியா போரத்தின் பொருளாளர் நூருல் ஹுதா உமர், சிலோன் மீடியா போரத்தின் உயர்பீட உறுப்பினர்களான எம்.வி.எம்.நிம்சான், என்.எம்.சிறாஜ்டீன், என்.எம். அப்ராஸ்
மற்றும் லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் நிறுவனத்தின் உறுப்பினர்களான எம் வி.எச். நியாஸ், ஏ.எல்.எம். நிசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


