பல தசாப்தங்களில் நாட்டின் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றிலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
2025 நவம்பர் மாத இறுதியில் நாட்டைத் தாக்கிய டித்வா சூறாவளிக்கு இந்தியாவின் விரைவான மனிதாபிமான நடவடிக்கையை அடுத்து இந்த விஜயம் அமையவுள்ளது.
டித்வா புயல் கரையைக் கடந்த உடனேயே இந்தியா ஆப்ரேஷன் சாகர் பந்து திட்டத்தை தொடங்கியது, சிறப்பு பேரிடர் மீட்புப் படையினரை இலங்கைக்கு அனுப்பிய முதல் நாடாக மாறியது.
ஆப்ரேஷன் சாகர் பந்து மூலமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கிய மற்றும் மண்சரிவுகளில் சிக்கிய வீடுகளிலிருந்து 450க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், வெளிவிவார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் இலங்கைப் பயணம், இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” என்ற கொள்கை மற்றும் பகிரப்பட்ட கடல்சார் நலன்களை பிரதிபலிக்கும் தொடர்ச்சியான மீள் கட்டமைப்பு ஆதரவில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


