தேசிய உற்பத்தி திறன் போட்டியில் சம்மாந்துறை மாணவி அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடம்

(சர்ஜுன் லாபீர்)

தேசிய உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு வாரத்திற்கு இணங்க, டிஜிட்டல் தொழில்நுட்ப திட்ட முன்மொழிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) காணொளி போட்டியானது
உற்பத்தித்திறன் மற்றும் புத்தாக்கங்களில் இளைஞர்களின் அபிவிருத்திக்காக தேசிய ரீதியிலான “உற்பத்தித்திறனுக்கான இளைஞர் உள்ளீடுகள்” என்ற கருப்பொருளின் இடம்பெற்ற போட்டியில்
தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினையும் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும் பெற்றுக்கொண்ட சம்மாந்துறையைச் சேர்ந்த முஹம்மட் கலீலுர் ரஹ்மான் பாத்திமா ரஷா என்ற மாணவி சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களினால் நேற்று(19) பிரதேச செயலகத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல் நஜீமா அவர்களும் கலந்து கொண்டார்.

குறித்த மாணவி முன்னாள் ரூபவாஹினி செய்தி வாசிப்பாளர் மறைந்த கலீலூர் ரஹுமானின் மகளாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.