மத்திய மலைநாட்டிற்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் கடும் மழை காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மூன்றாம் நிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (18) காலை 8 மணிக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நாளை (19) காலை 8 மணி வரை செல்லுபடியாகும்.

நிலை 3: சிவப்பு எச்சரிக்கை (வெளியேறவும்)

கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்பர, மெததும்பர நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன, மதுரட்ட ஆகிய பிரதேச செயலக மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளுக்கும் மூன்றாம் நிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச செயலக மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அபாயம் காரணமாக உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நிலை 2: அம்பர் எச்சரிக்கை (அவதானமாக இருக்கவும்)

கண்டி மாவட்டத்தின் கங்கவட்ட கோரளை, பாதஹேவாஹெட்ட, அக்குரணை, யடினுவர, தும்பனை, ஹாரிஸ்பத்துவ, பூஜபிட்டிய, பஸ்பாகே கோரளை, ஹதரலியத்த, குண்டசாலை, உடுனுவர, தெல்தொட்ட, பாததும்பர, பன்வில, உடபலாத்த, மினிப்பே, கங்க இஹல கோரளை

பதுளை மாவட்டத்தின் லுணுகல, ஹாலி எல, பதுளை மற்றும் பஸ்ஸறை

குருணாகல் மாவட்டத்தில் ரிதிகம

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவு

மாத்தளை மாவட்டத்தின் நாவுல, ரத்தோட்டை, அம்பன்கங்கை கோரளை, உகுவெல, வில்கமுவ, யட்டவத்த, மாத்தளை, பல்லேபொல, லக்கலை பல்லேகம.

ஆகிய பிரதேச செயலக மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படலாம் என்பதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மட்டம் 1: மஞ்சள் எச்சரிக்கை (விழிப்புடன் இருக்கவும்)

பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை, கந்தெகெட்டிய, மீகஹகிவுல, ஊவா பரணகம, வெலிமடை, எல்ல, பண்டாரவளை, சொரணாதொட்ட, பண்டாரவளை, ஹல்துமுல்ல

குருணாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல, அலவ்வ, மாவத்தகம, மல்லவபிட்டிய

நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை, நோர்வுட், அம்பகமுவ கோரளை, கொத்மலை (மேற்கு மற்றும் கிழக்கு) ஆகிய பிரதேச செயலக மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் மழை தொடரும் பட்சத்தில் ஏற்படக்கூடிய மண்சரிவு அபாயம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மலைப்பாங்கான பகுதிகளில் நிலத்தில் வெடிப்புக்கள் ஏற்படுதல், மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்வடைதல், கட்டிடங்களின் சுவர்களில் திடீர் வெடிப்புக்கள் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.