தெற்கு அதிவேக வீதியில் அங்குனுகொலபெலஸ்ஸ 168 கிலோமீட்டர் மைல் கல் பகுதிக்கு அருகில், வெளிநாட்டுப் பிரஜைகள் பயணித்த சொகுசு வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு பிரஜைகள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்
தெற்கு அதிவேக வீதியில அங்குனுகொலபெலஸ்ஸ 168 கிலோமீட்டர் மைல் கல் பகுதி அருகில், வேன் ஒன்றும் சிறியரக லொறியொன்றும் மோதியதில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
இந்த விபத்தில் வேனில் பயணித்த இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
எல்ல பகுதியில் இருந்து மிரிஸ்ஸ பகுதிக்கு சுற்றுலா மேற்கொண்ட நான்கு ஈரானிய பிரஜைகளை ஏற்றிச்சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது
குறித்த விபத்தின் போது லொறி பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது
விபத்தில் காயமடைந்தவர்கள் தெற்கு அதிவேக வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் விஷேட அதிரடிப்படையைச் சேர்ந்த நோயாளர் காவு வாகனம் மூலம் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்
அவர்கள் சிகிச்சைநிறைவடைந்து தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வேனின் சாரதி நித்திரைகொண்டமையினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


