மத்தியஸ்த சபைகள் தொடர்பான விழிப்புணர்வூட்டல் செயலமர்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

காத்தான்குடியில் மத்தியஸ்த சபைகள் தொடர்பான விழிப்பூணர்வூட்டல் செயலமர்வு நேற்று (09) காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூதின் வழிகாட்டலில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இச் செயலமர்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

காத்தான்குடி பிரதேச மத்தியஸ்த சபைக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் மௌலவி எம் ஹிஸ்புல்லாவின் நெறிப்படுத்தலில் மத்தியஸ்த சபை பிரதி தவிசாளர் முபீதா றமீஸ் மற்றும் மத்தியஸ்த சபை உறுப்பினர் றஸ்மினா றஸ்மின் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

மத்தியஸ்த சபைகள் என்றால் என்ன, அதனால் கிடைக்கும் நன்மைகள், மத்தியஸ்த சபைகளால் ஆற்றுப்படுத்தப்படும் பிணக்குகளை எவ்வாறு கையாள்வது, தீர்க்கப்பட்டமைக்கான சான்றிதழ் மற்றும் தீர்க்காமைக்கான சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பாகவும் மத்தியஸ்த சபைகள் தொடர்பாக ஏனையவர்களுக்கும் தெரியப்படுத்துமாறும் இச்செயலமர்வில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.