அண்மைக்கால இயற்கை அனர்த்தத்தினால் கற்றல் உபகரணங்களை இழந்துள்ள மாணவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கென கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட “கல்விக்காகக் கரம் கொடுப்போம்” என்ற திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினால் மேற்கொள்ளப்பட்ட கற்றல் உபகரணங்கள் , பாதணிகள் மற்றும் பாடசாலைச் சீருடைகளைச் சேகரிக்கும் பணிகளின்போது இலங்கைப்போக்குவரத்துச் சபையின் ஏறாவூர் சாலை நலன்புரிச் சங்க ஊழியர்களின் சுமார் ஓரிலட்சம் ரூபா பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்ட கற்றல் உபகரணப் பொதிகளை சாலை முகாமையாளர் எம். எம். ஸைனி வலயக் கல்விப்பணிப்பாளர் எம்எம். ஜவாதிடம் ஒப்படைப்பதைப்படத்தில் காணலாம். ஆசிரிய வள நிலையத்தின் முகாமையாளர் ஏ. றியாஸ் மற்றும் வலயக்கல்விப்பணிமனை போக்குவரத்துச் சாலை ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் அருகில் நிற்கின்றனர்.(ஏறாவூர் நிருபர் -நாஸர்)


