பாதிக்கப்பட்ட வீட்டை சுத்தம் செய்யும் திருமலை எம்.பி

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா சமாச்சதீவு பகுதிகளில் பாதிப்படைந்த வீடுகள் மற்றும் பொது கட்டிடங்களை சுத்தம் செய்யும் பணி இன்று (5) திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையிலான குழுவினரால் ஆரம்பம்பிக்கப்பட்டன.

தற்போது வெள்ளம் வடிந்தோடி இருந்தாலும் வீடுகளை சுத்தம் செய்ய முடியாமல் பலர் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் உள்ளனர்.
எனவே தம்மால் முடிந்த உதவிகளை நாமும் அவர்களுக்கு செய்வோம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.