பெற்றோர்கள், பாதுகாவலர்கள், மற்றும் சமூகத்தினை விழிப்புணர்வு செய்யும் நிகழ்ச்சித் திட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

சிறந்த பெற்றோராகுதல் எனும் தொனிப்பொருளில் மகளிர், சிறுவர், அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் நடாத்திய விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (04) செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக், தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,உதவி பிரதேச செயலாளர் ஏ. ஜுமானா ஹஸீன், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.ஆர். எம்.தாஸிம், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.நிஹாரா ஆகியோரும், வளவாளராக செயலகத்தின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.சர்ஜுன், மற்றும் செயலக பிரிவிற்குட்பட்ட முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.