ஹஸ்பர் ஏ.எச்_
இலங்கையின் வெள்ள அனர்த்தத்தில் திருகோணமலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கிண்ணியா, மூதூர் போன்றவற்றை குறிப்பிட்டு கூறலாம். மகாவலி நீர் திருக்கோணமலை முடிவடைவதன் காரணமாக குறித்த நீர் கிண்ணியா ஊடாக பாய்ந்து செல்வதால் இந்த அனர்த்தில் கிண்ணியா கடுமையாக பாதிக்கப்பட்டது. கிண்ணியாவின் கடலோர அனைத்து பிரதேசங்களும் ஐந்து அடிக்கு மேல் தண்ணி பரவியதாக இருந்தது. இதனால் கிண்ணியா நகர சபை, பிரதேச சபைகளுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டது.
இதனால் பொதுமக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து, மக்கள் நிவாரணங்களை பெற்றுக் கொள்வதிலும் கடுமையான நெருக்கடியை எதிர் நோக்குகின்றனர். ஏனைய பிரதேசங்களில் இருந்து கிண்ணியாவுக்கு உதவி கிடைக்காததால் பழைய மாணவர்கள் தி/ கிண்/அல்-அக்ஸா தேசிய பாடசாலை, தி / கிண்/ மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்கள் கூடாரம் அடித்து பொருட்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளனர்.. குறித்த பணி இன்றும் நாளையும் தொடரும். வெளிநாட்டிலுள்ளவர்கள், உள்நாட்டில் உள்ளவர்கள் அவர்களை தொடர்பு கொண்டு உதவிகளை வழங்கலாம்.
இவர்களை தொடர்புகளுக்கு –
Name:- MJM. Ijas
Number:- 0756284170 (T/Kin- Al Aqzha College Old Boys)
Name:- SM. Sajeeth
Number:- 0759752305 (T/Kin- Central College Old Boys)


