செயற்கை பெற்றோல் தட்டுப்பாட்டை ஏற்ப்படுத்த வேண்டாம்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்கையான பெற்றோல் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என மக்களிடம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் கோரிக்கையை இன்று (01) விடுத்துள்ளார்.

மாவட்டத்தில் சாரியாக ஒரு நாளைக்கு165000 லிட்டர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று மட்டும் 231000 லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் வரிசையில் நின்று பெற்ரோல் கொள்வனவு செய்வதனால் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.