களனி ஆற்றின் நீர் மட்டம் உச்சத்தை எட்டியது மக்களுக்கு எச்சரிக்கை!

களனி ஆற்றின் வலது கரையில் உள்ள நீர்மட்டம் தற்போது அணையின் உச்சத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அப்பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கைகள் குறித்து மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் இந்தப் பகுதியில் சுற்றிப் பார்ப்பதையோ அல்லது தேவையில்லாமல் தங்குவதையோ தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்