களனி கங்கை பெருக்கெடுப்பால் ஏற்பட்ட வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களின் சுக துக்கங்களை கேட்டறிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (30) கொழும்பில் பல பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.
கொலன்னாவை பிரதேச செயலகத்திற்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து தர வேண்டிய விடயங்கள் குறித்து கேட்டறிந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் உள்ளிட்ட பலரும் இவ்விஜயத்தில் பங்கேற்றிருந்தனர்.


