களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளில் அண்மைய வரலாற்றில் ஏற்படாத மட்டத்திலான அதி அபாயகரமான வெள்ள நிலைமை குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை (Red Notice) ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (28) பிற்பகல் 1.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
களனி கங்கை ஆற்றுப்படுகை பகுதிகளில் உள்ள நீரோட்டப் பிரதேசங்களில் பல இடங்களில் தற்போது அதிக மழைவீழ்ச்சி பதிவாகி வருகிறது.
இந்த நிலைமையிலிருந்து உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள மிகுந்த கவனத்துடன் செயற்படுமாறும், அதிகபட்ச பாதுகாப்பான இடங்களை நோக்கி முடிந்தவரை விரைவாகச் செல்லுமாறும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


