அனர்த்தத்தின் போது பொறுப்பு வாய்ந்த அரச நிர்வாக அதிகாரிகளின் அசண்டையீனத்தால் பாதிக்கப்படும் பொது மக்கள்!

அனர்த்தத்தின் போது பொறுப்பு வாய்ந்த அரச நிர்வாக அதிகாரிகளின் அசண்டையீனம். பாதிக்கப்படுவது எமது மக்கள். இன்றைய தினம் பாராளுமன்றத்தில் 28.11.2025. ஏனைய மாவட்டங்களிலிருந்து வடிந்து வரும் நீரினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் வெள்ள நிலைமையானது அதிகரிக்கக்கூடும். களவு, கொள்ளை காரணமாக எமது மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து செல்வதற்கு விரும்புவதில்லை. மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் போன்றவர்கள் வீடுகளில் இருப்போருக்கு நிவாரணம் வழங்க முடியாது; அகதிகளாக இடம்பெயர்வோருக்கே வழங்க முடியும் எனக் கூறுகின்றனர். ஆனால் வீடுகளில் இருப்போருக்கும் நிவாரணங்களை வழங்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட அரசாங்க அதிபர்களை நியமனம் செய்யும் போது மாவட்டத்தைப் பற்றி அறிந்து மக்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் இணைந்து பணி மேற்கொள்வோரை நியமனம் செய்ய வேண்டும். தற்போது மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் NPP அரசாங்கத்துடன் இணைந்து மாத்திரமே பணி புரிய முடியும் என்கின்றனர்.